உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி.. தமிழக வீரர் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தல்.! - Seithipunal
Seithipunal


உலக ஜூனியர் தடகளத்தில் தமிழக வீரர் செல்வபிரபு வெள்ளி வென்று அசத்தியுள்ளார்.

உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி (20 வயதுக்குட்பட்டோர்) கொலம்பியாவின் கலி நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.

ஆண்களுக்கான டிரிபிள் ஜம்பில் (மும்முறை தாண்டுதல்) மதுரையைச் சேர்ந்த 17 வயதான செல்வபிரபு 16.15 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். ஜமைக்காவின் ஜெய்டன் ஹிப்பெர்ட் 17.27 மீட்டர் தாண்டி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார்.

இந்த தொடரில் இந்தியா 2 வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் மொத்தம் 3 பதக்கம் பெற்றுள்ளது‌.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

World junior Athletics championships tamilnadu player won silver medal


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->