உலக ஜூனியர் தடகளப் போட்டி.. விவசாயி மகள் இரட்டை பதக்கம் வென்று அசத்தல்.!
World junior Athletics championships Rubel Southri won 2 medals
உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் (20 வயதுக்கு உட்பட்டோர்) போட்டி கொலம்பியாவின் கலி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ருபல் சவுத்ரி 51.85 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெண்கலப்பதக்கம் பெற்றார்.
இவர் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் மாவட்டத்தில் ஷாபர் ஜெய்பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வரும் ஒரு விவசாயியின் மகள் ரூபால் சவுத்ரி.
இவர் உலக தடகள ஜூனியர் போட்டியில் கலந்து கொண்டு இரட்டை பதக்கங்கள் வென்றுள்ளார். இதன் காரணமாக 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை ரூபால் சவுத்ரி பெற்றுள்ளார்.

இவர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். அதன் பின் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 4×400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். மேலும் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பதக்கம் வென்ற 2-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
English Summary
World junior Athletics championships Rubel Southri won 2 medals