2025 உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜென்ட்ஸ் லீக்: இந்திய அணி புறக்கணிப்பு!
World Championship Legends India vs Pak
2025 உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜென்ட்ஸ் லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுக்குப் பிறகு பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன.
முதல் அரையிறுதியில் இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் மோத வேண்டியிருந்தது.
ஆனால், பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இந்திய வீரர்கள் மறுத்ததால், பாகிஸ்தான் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் விளைவாக ஜூலை 20 அன்று நடைபெற இருந்த இந்தியா - பாகிஸ்தான் லீக் போட்டியும் ரத்து செய்யப்பட்டது.
இந்தப் போட்டியில் பங்கேற்க வேண்டியிருந்த இந்திய வீரர்கள் ஷிகர் தவான், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், யூசுப் பதான் உள்ளிட்டோர் பங்கேற்பைத் திரும்பப்பெற்றனர்.
இந்நிலையில், இந்திய அணி அரையிறுதியில் பாகிஸ்தானுடன் விளையாடாமல் தங்களது எதிர்ப்பை தெரிவித்ததால், இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் முன்னேறியுள்ளது.
இரண்டாவது அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதவிருக்கின்றன.
English Summary
World Championship Legends India vs Pak