“அந்த தருணத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது” – ஐபிஎல் கோப்பை வென்ற நினைவுகளை பகிர்ந்த விராட் கோலி - Seithipunal
Seithipunal


ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, கடந்த ஆண்டு நடைபெற்ற 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியை வீழ்த்தி தனது முதல் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தாலும், கோப்பையை வெல்ல முடியாமல் தவித்த ஆர்.சி.பி., 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியது.

இந்த வெற்றி, அணியின் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, தொடக்கத்திலிருந்து RCB அணிக்காகவே விளையாடி வரும் விராட் கோலிக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்திருந்தாலும், ஐபிஎல் கோப்பை என்பது கோலியின் நீண்ட நாள் கனவாக இருந்தது.

இந்நிலையில், அந்த வெற்றித் தருணம் குறித்து விராட் கோலி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.அவர் கூறுகையில்:“கடந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றபோது என்னுடைய உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. போட்டி முடிந்த அந்த நொடியில் நான் கைகளை கூப்பி முழங்காலில் அமர்ந்து கண்ணீர் விட்டேன். கடவுளுக்கு நன்றி மட்டுமே சொன்னேன்.”

மேலும் அவர் கூறியதாவது:“நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன் இப்படியான ஒரு அற்புதமான தருணத்தை அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தேன். அது கடந்த ஆண்டு நடந்தது. இறுதிப்போட்டியின் கடைசி நான்கு பந்துகளில் நான் என்ன உணர்ந்தேன் என்பதை மற்றவர்களுக்கு சொல்ல முடியாது. அது மிகவும் உணர்ச்சிபூர்வமான தருணம்.”

RCB ரசிகர்களின் நீண்டகால காத்திருப்பையும் கோலி நினைவுகூர்ந்தார்.“ஒட்டுமொத்த RCB ரசிகர்களும் இந்த கோப்பைக்காகவே காத்திருந்தனர். அந்த வெற்றி அனைவருக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியை தந்தது” என்றார்.

விராட் கோலியின் இந்த உணர்ச்சிபூர்வமான பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Words cannot describe that moment Virat Kohli shares memories of winning the IPL trophy


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->