ஆரம்பமானது மகளிர் உலகக்கோப்பை போட்டி.! - Seithipunal
Seithipunal


இந்தியா உட்பட 8 அணிகள் பங்கேற்கும் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் இன்று தொடங்கியது.

1973 ஆம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்து அணி வென்றிருந்தது. கடந்த ஆண்டு நடைபெற இருந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டுக்காண உலகக் கோப்பை கிரிக்கெட்  போட்டி இன்று முதல் ஏப்ரல் மாதம் 3ம் தேதி வரை நியூசிலாந்து நாட்டில் நடைபெறுகிறது.

இதுவரை உலகக் கோப்பையில் 6 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலியா, நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து 4, நியூசிலாந்து 1, இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், வங்க தேசம், தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

லீக் சுற்று ஆட்டங்களில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும் லீக் சுற்றுகள் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும் மொத்தம் 31 போட்டிகள் 6 மைதானங்களில் நடைபெற உள்ளன.

கடந்த முறை நூலிழையில் கோப்பையைத் தவற விட்ட இந்திய அணி இம்முறை எப்படியும் கோப்பையை வென்று ஆகவேண்டும் என்ற தீவிரத்துடன் களமிறங்க உள்ளது. பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக சேயல்படும் இந்திய அணி இந்த கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், மகளிர் உலகக் கோப்பை போட்டிக்கான முதல் போட்டியில் இன்று நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 6-ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் விளையாடுகிறது.

இந்த மகளிர் உலகக் கோப்பை தொடரில், கோப்பையை வெல்லும் அணிக்கு 10 கோடி ரூபாய் பரிசுத் தொகையும், இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு நான்கரை கோடி ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட இருக்கிறது. போட்டியின் மொத்த பரிசு தொகை இருபத்தி ஆறரை கோடி ரூபாயாகும்.

கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி போட்டித்தொடர் நடைபெற உள்ளதால் 10 சதவீத ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens World Cup starts in newzealand


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->