மகளிர் டி20 உலக கோப்பையை வெல்லப் போவது யார்? ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இன்று மோதல்.! - Seithipunal
Seithipunal


மகளிர் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன.

8வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் பிப்ரவரி 10ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த டி20 உலக்கோப்பையில் மொத்தம் 23 போட்டிகள் நடைபெற உள்ளது.

அவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது. அதேபோல் 'பி' பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் இடம் பெற்றன.

இந்த நிலையில் தற்போது லீக் சுற்று போட்டிகளின் முடிவில் 'ஏ' பிரிவில் முதல் 2  இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா அணிகளும், அதேபோல் 'பி' பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த இங்கிலாந்து, இந்தியா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது.

அதனைத் தொடர்ந்து அரையிறுதி போட்டிகயில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணியும், இங்கிலாந்து அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் மகளிர் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது.

மகளிர் டி20 உலக கோப்பையில் சிறந்த அணியான ஆஸ்திரேலிய அணி இதுவரை நடந்த மகளிர் டி20 உலக கோப்பையில் 6 முறை இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. இதில் 5 சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், தென் ஆப்பிரிக்கா அணி முதன்முறையாக உலக கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை நேருக்கு நேர்

மகளிர் டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியா தென்னாபிரிக்கா அணிகள் இதுவரை 6 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 6 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணியே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Womens T20 World Cup final AUSW vs SAW today


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->