சி.எஸ்.கே அணி குடும்பம் போன்றது... பிராவோ நெகிழ்ச்சி பேட்டி.!! - Seithipunal
Seithipunal


வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரிக்கெட் வீரரான பிராவோ செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். இந்த பேட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் தோனிக்காக பாடல் இயற்ற விருப்பம் இருப்பதாக தெரிவித்தார். மேலும், உலகமே தூக்கி வைத்து கொண்டாடும் வீரருக்கு மரியாதை செய்யும் வகையில், பாடல் ஒன்றை வெளியிட இருக்கிறேன்.

இம்மாத துவக்கத்திலேயே எண் 7 என்ற தலைப்பில் பாடலின் தலைப்பு தேர்வு செய்யப்பட்ட நிலையில், தோனியை அவரது சொந்த ஊரான ராஞ்சி, ஒட்டுமொத்த இந்தியா மற்றும் சென்னை போன்ற இடங்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் தோனியை கொண்டாடி வருகின்றனர். சென்னையில் அவரை அன்போடு " தல " என்று அழைக்கின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான அணியாகும். 

எனது பாடல் சில காரணத்தால் முழுமைபெறாமல் இருக்கும் நிலையில், சென்னையை அணியின் சார்பாக தோனிக்கு மரியாதையை செய்யும் வகையில் இந்த பாடல் இருக்கும். தோனி தனது வாழ்க்கையில் மட்டுமல்லாது, கிரிக்கெட் உலகத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற நட்சத்திரத்தின் வாழ்க்கையை அமைக்க பெரும் உதவி செய்தார்.

தோனிக்கான பாடலில் சில வரிகளை மாற்றம் செய்ய விரும்புகிறேன். அவருக்கு எதாவது செய்ய வேண்டும் என்று எனது மனம் விரும்புகிறது. ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, விராட் போன்ற பல வீரர்களும் தங்களின் கிரிக்கெட் வாழ்க்கை மற்றும் தனக்கு உதவிய நபர்களை பாராட்டுகின்றனர். தோனி பலருக்கு உதவி செய்தவர். நாட்டிற்கு பல பட்டங்களை பெற்று கொடுத்தார். அவருக்கு மரியாதை செய்யும் வகையில் அவரது சிறப்பு எண்ணான 7 ஐ அவரது பாடலுக்கு தலைப்பாக வைக்கப்பட்டது.

கடந்த 2011 ஆம் வருடத்தில் சென்னை அணியில் இணைந்த எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக தோனி இருந்தார். எனது வாழ்க்கையில் நான் பெரிய வீரராக உருவெடுக்க அவர் உதவினார். ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை அணிக்கென தனி மதிப்பு இருந்தது. தோனி என் மீது ஏன் இவ்வுளவு நம்பிக்கை வைத்துள்ளார் என்று நான் பலமுறை கேட்டிருக்கிறேன். அவர் நமது திறமை மற்றும் விளையாடும் முறையை மதிப்பளிக்கிறார். அவரே உலகின் மிகப்பெரிய தலைசிறந்த கேப்டன். சென்னை அணி குடும்பத்தை போல இருந்தது. அது போன்ற மற்றொரு அணி இல்லை என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

West Indies player Bravo says CSK team like family


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal