இந்தியாவை ‘க்ரோவெல்’ செய்யவே தாமதமாக டிக்ளர் செய்தோம் – சர்ச்சையில் சிக்கிய தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர்; மன்னிப்பு கேட்கனும்.. பார்த்திவ் பட்டேல் விளாசல்
We declared late to grovel India South African coach embroiled in controversy Apologize Parthiv Patel slams
கௌகாத்தியில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற முடியாத நிலை உருவாகியுள்ளது. தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 549 ரன்களின் மாபெரும் இலக்கை துரத்தும் இந்தியா சிரமப்பட்டு வரும் நிலையில், ஒருவேளை போட்டி டிரா ஆனாலும், 25 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் 1–0 (2) என்ற கணக்கில் தொடரை தென்னாப்பிரிக்கா கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.
இந்த சூழலில், தென்னாப்பிரிக்கா 500 ரன்களுக்கும் மேலான முன்னிலை பெற்ற பிறகும் தாமதமாக டிக்ளர் செய்தது குறித்து எழுந்த கேள்விக்கு, பயிற்சியாளர் சுக்ரி கோன்ராட் கூறிய பதில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அவர்,“இந்தியாவை க்ரோவெல் செய்யவே தாமதமாக டிக்ளர் செய்தோம்.”என்று கூறினார்.
‘Crowell’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு பல இழிவான, கீழ்ப்படிதல் குறிக்கும் அர்த்தங்கள் உள்ளதால், இது கிரிக்கெட்டில் பயன்படுத்த வேண்டிய சொல் அல்ல என்பது பலரின் கருத்து. குறிப்பாக 1976-ல் இங்கிலாந்து கேப்டன் டோனி கிரைக், வெஸ்ட் இண்டீஸை ‘க்ரோவெல்’ செய்ய விரும்புகிறோம் எனக் கூறியபோது அது இனவெறி சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் க்ளைவ் லாய்டின் அணி கோபத்தில் நெருப்பாக விளையாடி 3–0 என்ற கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்தது வரலாறு.
இதே நிலையில், கோன்ராட் பயன்படுத்திய சொல் மீண்டும் இன சார்ந்த அவமதிப்பு நினைவுகளை கிளப்பியதால் விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. இதைத் தொடர்ந்து பயிற்சியாளர், “இனவெறி போன்ற அர்த்தத்தில் நான் சொல்லவில்லை” எனத் தெளிவுபடுத்தினார்.
ஆனாலும் முன்னாள் இந்திய வீரர் பார்த்திவ் பட்டேல் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:“அந்த வார்த்தைக்கு உள்ள எடை அவருக்கு தெரியாததாக நான் நினைக்கவில்லை. அவர் சொன்ன விதமும் முக பாவனையும் அவமரியாதை இருந்ததை காட்டுகிறது. இந்தியா நன்றாக விளையாடியபோதும், இப்படியான வார்த்தை தேவையில்லை. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.”
தென்னாப்பிரிக்கா தொடரை வெல்லும் தருணத்தில் கூட பயிற்சியாளரின் ஒரு வார்த்தை பெரும் சர்ச்சையை தூண்டியிருக்கிறது.
இன்று அவர் மன்னிப்பு கோருவாரா? ஐசிசி இதை எப்படி எதிர்கொள்ளும்? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
English Summary
We declared late to grovel India South African coach embroiled in controversy Apologize Parthiv Patel slams