ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் காயம்?! சோகத்தில் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கவை வீழ்த்தியது.

இரண்டாவது போட்டி பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதையடுத்து நாளை நடைபெறும் ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக டேவிட் வார்னர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் நாளை நடைபெறும் போட்டியில் டேவிட் வார்னர் பங்கேற்கமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், வார்னர் அணியில் பங்கேற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். மற்ற வீரர்களை போல கண்டிப்பாக விளையாட வேண்டும் என்று நினைப்பார். அவர் விளையாடுவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என கூறினார்.
 

English Summary

warnar leg injury


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal