ஆசியாவிலேயே அதிக ஃபாலோவர்கள்.. இன்ஸ்டாகிராமில் விராட் கோலி புதிய சாதனை.! - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். அதன்படி, களத்தில் பேட்டிங்கில் ஆக்ரோஷமாக செயல்படும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர்.

கிரிக்கெட்டின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலியின் பேட்டிங்குக்கு ரசிகர்கள் உள்ள நிலையில், இவருடைய அழகுக்கு பெண் ரசிகைகள் அதிகமாக உள்ளனர். கிரிக்கெட்டைப் பற்றி தெரியாதவர்கள் கூட விராட் கோலிக்கு ரசிகர்களாக உள்ளனர்.

இதில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் விராட் கோலிக்கு ஏராளமான ரசிகர்கள் விராட் கோலியை பேஸ்புக் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆசியாவிலேயே இன்ஸ்டாகிராமில் 250 மில்லியன் ஃபாலோயர்களை கொண்ட முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸிக்கு அடுத்தபடியாக அதிக பாலோயர்களை கொண்ட விளையாட்டு வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virat Kohli most Instagram followers in Asia


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?
Seithipunal
-->