குருவை மிஞ்சிய சிஷியன்... கிரிக்கெட் தளபதியின் அசத்தல் சாதனை...!  - Seithipunal
Seithipunal


நேற்றுநடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இதில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற 3வது போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் அசத்தலான ஆட்டத்தை ஆடினார்கள்.

இதில், இந்திய கேப்டன் விராட் கோலி 89 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த ரன்கள் மூலம் கேப்டனாக ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டி போட்டியில் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்) அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்னும் தோனியின் சாதனை முறியடித்தார் விராட்கோலி.

Image result for virat kohli dhoni seithipunal

மேலும், இந்திய கேப்டன் விராட் கோலி கேப்டனாக இதுவரை 199 இன்னிங்சில் பேட்டிங் செய்து 11,208 ரன்கள் குவித்திருக்கிறார். முன்னதாக தோனி 330 இன்னிங்சில் 11,207 ரன்கள் எடுத்திருக்கிறார்.

இதை தொடர்ந்து, விராட் கோலி 14 ரன்கள் எடுத்தபோது ஒரு கேப்டனாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த சாதனையையும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டார்கெட்டை கோலி 82 ஆட்டங்களில் எடுத்திருக்கிறார். இந்த சாதனை பட்டியலில் இந்தியாவின் தோனி (127 ஆட்டம்) இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (131 ஆட்டம்) மூன்றாவது இடத்திலும் இருக்கிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

virat kohli beat dhoni record


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->