அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விராட் கோலி.. ஐசிசி அறிவிப்பு.!
Virat Kohli and nida dar won October Month ICC awards
ஐசிசியின் சிறந்த வீரராக இந்திய அணியின் விராட் கோலியும் மற்றும் சிறந்த வீராங்கனையாக பாகிஸ்தானின் நிதா தர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர்கள் விருதுக்கான பரிந்துனரை பட்டியலை வெளியிட்டிருந்தது.

இதில், வீரர்களுக்கான விருது பரிந்துரை பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி, தென்னாப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லர் மற்றும் ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றிருந்தனர்.
சிறந்த வீராங்கனைகளுக்கான விருது பரிந்துரை பட்டியலில் இந்திய மகளிர் அணியின் ஜெமிமா ரோட்ரிகஸ் மற்றும் தீப்தி சர்மா, பாகிஸ்தான் மகளிர் அணியின் நிதா தர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இந்த நிலையில் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு இந்திய வீரர் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. அதேபோல் சிறந்த வீராங்கனையாக பாகிஸ்தான் மகளிர் அணியின் நிதா தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
English Summary
Virat Kohli and nida dar won October Month ICC awards