விராட் கோலிக்கு கொரோனா தொற்று.? வெளியான அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமந்துடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இருந்த போதிலும் கூட உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 220-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா தொற்றால் மனித உயிர்களுக்கு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் கோடிக்கணக்கானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மாலத்தீவில் விடுமுறையை கழித்துவிட்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோஹ்லிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தற்போது முழுவதுமாக குணமடைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சில வீரர்களுக்கு கொரோனா தொற்று இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virat Kohli affected covid positive and cure


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->