வைபவ் சூர்யவன்ஷி இருக்கக்கூடாது! 15 வயது வைபவ் சூர்யவன்ஷிக்கு புதிய விதிமுறை?இங்கிலாந்து வாரியம் போட்ட கட்டுப்பாடு – விவரம் இதோ! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய டி20 அணியில் இடம்பிடித்துள்ள 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் 2026 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் முதல் முறையாக இந்திய அணியில் வாய்ப்பு பெற்றுள்ள அவர்மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்திய அணி, இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்க உள்ளது. அதற்கு முன்னதாக அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலும் இந்திய அணி விளையாடவுள்ளது. அந்தத் தொடரிலேயே வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இளம் வயதில் தேசிய அணியில் இடம்பிடித்துள்ள வைபவ் சூர்யவன்ஷியுடன் அவரது பெற்றோரும் இந்த வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் உடன் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான செலவுகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஏற்கும் என்றும் முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், 16 வயது நிறைவடையாத வீரர்கள் தொடர்பாக சர்வதேச அளவில் நடைமுறையில் உள்ள சிறுவர் பாதுகாப்பு விதிமுறைகளின் அடிப்படையில், வைபவ் சூர்யவன்ஷிக்கு தனி வசதிகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, அவருக்கு தனி உடைமாற்றும் அறை மற்றும் தங்கும் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. அதே நேரத்தில், அணியின் கூட்டங்கள், தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் பயிற்சி தொடர்பான நிகழ்வுகளில் அவர் மற்ற வீரர்களுடன் பங்கேற்க அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விதிமுறைகள், வயது குறைந்த வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிப்படுத்தும் நோக்கில் பின்பற்றப்படுவதாக கூறப்படுகிறது.

இந்திய அணியில் மிக இளம் வயதில் இடம்பிடித்துள்ள வைபவ் சூர்யவன்ஷி, சர்வதேச கிரிக்கெட்டில் தனது திறமையை எவ்வாறு வெளிப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vaibhav Suryavanshi shouldnot be there A new rule for 15 yearold Vaibhav Suryavanshi The restriction imposed by the England board


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->