நாளை போட்டி தொடங்க இருக்கும் நிலையில், திடீர் சஸ்பெண்ட்! உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கவும் தடை! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான உமர் அக்மல் அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தற்காலிக தடை விதித்துள்ளது.

பாகிஸ்தான் அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர்களாக இருப்பவர்கள் அக்மல் சகோதர்கள். இவர்கள் எந்த அளவிற்கு சிறப்பாக விளையாடுகிறார்களோ, அதே அளவில் சர்ச்சையில் சிக்குவதில்லை வல்லவர்களாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில் அண்மையில் உமர் அக்மல் பயிற்சியின்போது தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாததன் காரணமாக அதில் தோல்வி அடைந்த கோபத்தில் அங்கிருந்த பயிற்சி உதவியாளரிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. இந்த புகாரை அடுத்து  போட்டிகளில் அவர் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான அறிக்கை ஐசிசி க்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல நாளை தொடங்க இருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் தொடரில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடவுள்ள உமர் அக்மல் சஸ்பெண்ட் பெற்றுள்ளதால் அவருக்கு பதில் மாற்று வீரரை தேர்வு செய்துகொள்ளலாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Umar akmal immediate suspend


கருத்துக் கணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்
கருத்துக் கணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்
Seithipunal