'கடந்த 5 ஆண்டுகளில் 71,963 படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது'; மக்களவையில் இணையமைச்சர் எல்.முருகன் தகவல்..! - Seithipunal
Seithipunal


கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய திரைப்பட தணிக்கை வாரியம்,  70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கியுள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இது குறித்து எதிர்கட்சி எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். அத்துடன், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சத்தின் கீழ், செயல்படும் சட்டப்பூர்வ அமைப்பான மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் திரைப்பட சட்டம் 1952 அப்டி, திரைப்பட தணிக்கை விதிகள் 2024 மற்றும் தொடர்புடைய வழிகாட்டுதலின் கீழ், மக்களுக்கு காட்சிப்படுத்துவதற்காக திரைப்படங்களை தணிக்கை செய்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய இறையாண்மை மற்றும் ஒற்றுமை, பாதுகாப்பு, பொது ஒழுங்கு, நாகரீகம், ஒழுக்கம் போன்ற சட்டப்பூர்வ அம்சங்களை மீறும் வகையிலோ, அல்லது அவதூறு, நீதிமன்ற அவமதிப்பு, குற்றத்தைத் தூண்டுதல் போன்றவை இடம் பெற்றாலோ மட்டுமே காட்சிகளை நீக்குவதற்கு அல்லது மாற்றியமைப்பதற்கு பரிந்துரைக்கப்படுகிறது என்று எல்.முருகன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனபடி, கடந்த ஐந்து ஆண்டுகளில் (2020-21 முதல் 2024-25 வரை) ஆன காலப்பகுதியில், சுமார் 71,963 திரைப்படங்கள் தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன என்று அறிவித்துள்ளார். மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திரைப்பட சட்டம் வகை செய்கிறது. இது போன்ற சூழல்களில் நீதிமன்ற உத்தரவுகள் செயல்படுத்தப்படுகின்றன என்று எல்.முருகன் மக்களவையில் பதிலளித்து பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister of State L Murugan informed the Lok Sabha that censor certificates have been issued to 71963 films in the last 5 years


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->