எய்ம்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி (INI-SS) தேர்வில் முதலிடம் பிடித்துள்ள ஜிப்மர் முதுநிலை பயிற்சி மருத்துவர் விக்னேஷ் துரை..!
JIPMER postgraduate resident doctor Vignesh Durai has secured the first rank in the AIIMS Super Speciality entrance examination
ஜிப்மர் முதுநிலை பயிற்சி மருத்துவர் விக்னேஷ் துரை, எய்ம்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி தேர்வில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தால் (AIIMS), தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி (INI-SS) தேர்வு நடைபெற்றது. கடந்த ஜனவரி 2026 அன்று நடந்த அமர்வில் ஜிப்மர் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறையின் முதுநிலை பயிற்சி மருத்துவரான விக்னேஷ் துரை அகில இந்திய அளவில் முதல் இடத்தை (AIR I) பெற்றுள்ளார்.
விக்னேஷ் துரை, தனது எம்பிபிஎஸ்()பட்டத்தை சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் (2013-2019) முடித்துள்ளார். ஜிப்மரில் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத்தில் தனது எம்எஸ் பட்டத்தைப் (2020-2022-இல்) பெற்றுள்ளார். தற்போது ஜிப்மரின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறையில் முதுநிலை பயிற்சி மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.
அதாவது, எம்சிஎச் (மகளிர் மருத்துவ புற்றுநோயியல்) பாடத்துக்கான மிகவும் போட்டி நிறைந்த எய்ம்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி (INI-SS) தேர்வில் டாக்டர் விக்னேஷ் துரை தேசிய அளவில் முதல் இடத்தைப் பெற்றுள்ளதாக ஜிப்மர் தெரிவித்துள்ளது.
English Summary
JIPMER postgraduate resident doctor Vignesh Durai has secured the first rank in the AIIMS Super Speciality entrance examination