இரண்டு உலகக் கோப்பைகள்…பத்ம ஸ்ரீ ரோகித் சர்மா1 - ‘முழுத் தகுதியானவர்’ என வெங்கடேஷ் பிரசாத் புகழாரம்
Two World CupPadma Shri Rohit Sharma Venkatesh Prasad praises him fully deserving
பல்வேறு துறைகளில் அபார சாதனைகளைப் படைத்தவர்களை கௌரவிக்கும் வகையில், இந்திய அரசின் சார்பில் ஆண்டுதோறும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த உயரிய விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ என மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.
அந்த வரிசையில், இந்திய கிரிக்கெட்டில் தனித்த அடையாளத்தைப் பதித்த நட்சத்திர வீரர் ரோகித் சர்மாவுக்கு இந்த ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு ரோகித் சர்மா முழுமையாக தகுதியானவர் என இந்திய அணியின் முன்னாள் வீரரும், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் (KSCA) தலைவருமான வெங்கடேஷ் பிரசாத் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர்தெரிவித்ததாவது,"பத்ம ஸ்ரீ விருது பெறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல; அது ஒரு மிகப்பெரிய சாதனையின் அடையாளம். அந்த அளவுக்கு ரோகித் சர்மா தன்னை நிரூபித்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாக அனைத்து வடிவங்களிலும் தொடர்ந்து விளையாடி, கிரிக்கெட் வரலாற்றில் தனித்துவமான சாதனைகளை அவர் படைத்துள்ளார்.
இரண்டு டி20 உலகக் கோப்பைகளை வென்ற ஒரே இந்திய வீரராக அவர் தனியாகவே உயர்ந்து நிற்கிறார்.ரோகித் சர்மாவுக்கு 16 அல்லது 17 வயதே இருக்கும் காலத்தில், இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணிக்காக அவர் விளையாடிய நாட்களிலிருந்தே அவரை நான் கவனித்து வருகிறேன்.
அப்போதே, அவரது பேட்டிங்கில் இருந்த இயல்பான திறமை, நிதானம் மற்றும் அபார ஆற்றல் தெளிவாக வெளிப்பட்டது.அவர் ஆரம்ப காலத்திலிருந்தே என்னை கவர்ந்த விஷயம், ஷாட் அடிப்பதற்கு அவர் எடுத்துக்கொள்ளும் நேரம் மற்றும் அதன் நேர்த்தி. அந்த அமைதி, அந்த கட்டுப்பாடு , இவை அனைத்தும் அவரை ஒரு தரமான பேட்ஸ்மேனாக மாற்றின.
இந்தியாவில் உருவான எந்தவொரு சிறந்த வீரருடனும் ரோகித் சர்மாவை எளிதாக ஒப்பிட முடியும். நாம் பேசிக் கொண்டிருப்பது சாதாரண வீரரைப் பற்றி அல்ல; ஒரு அபூர்வமான, உயர்தர பேட்ஸ்மேனைப் பற்றித்தான்” என்று வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.
English Summary
Two World CupPadma Shri Rohit Sharma Venkatesh Prasad praises him fully deserving