வெளியேறப் போவது யார்.? லக்னோ மற்றும் பெங்களூர் அணிகள் இன்று மோதல்.!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று வெளியேற்றுதல் சுற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகிறது. இந்தப் போட்டியில் தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேறும். வெற்றி பெறும் அணி முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடைந்த ராஜஸ்தானுடன் அணியுடன் ஆமதாபாத்தில் வருகின்ற 27 ஆம் தேதி 2வது தகுதி சுற்றில் விளையாடும். அதில் வெற்றி பெறும் அணி இரண்டாவது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 

லக்னோ அணியை பொறுத்தவரை 14 போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் வெற்றி பெற்று  18 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. லக்னோ அணி பேட்டிங்கை பொருத்தவரை குயின்டான் டி காக், கே எல் ராகுல் நல்ல பார்மில் உள்ளனர். அதேபோல தீபக் ஹூடா, ஆயுஷ் பதோனி, குருணல் பாண்ட்யா, மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். பந்துவீச்சை பொருத்தவரை அவேஷ்கான், மொசின் கான், ரவி பிஷ்னோய், ஜாசன் ஹோல்டர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். 

பெங்களூர் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 14 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. பெங்களூர் அணி பேட்டிங்கை பொருத்தவரை பாப் டு பிளிஸ்சிஸ் நல்ல நிலையில் உள்ளார். விராட் கோலி கடந்த லீக் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு 73 ரன்களை குவித்தார். மேக்ஸ்வெல், ஷபாஸ் அகமது மற்றும் தினேஷ் கார்த்திக் கடைசி கட்ட ஆட்டத்தை அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்கிறார். பந்துவீச்சை பொறுத்தவரை ஹசரங்கா, ஹேசில்வுட், ஹர்ஷல் பட்டேல் சிறப்பாக பந்துவீசிய வருகின்றனர். ஹர்ஷல் பட்டேல் கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இன்றைய போட்டியில் ஆடுவது சந்தேகமாகியுள்ளது.

ஐபிஎல் கோப்பையை ஒருமுறைகூட பெங்களூர் அணி வென்றது இல்லை. இந்த முறை கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே லீக் போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியதால்,  பெங்களூரு அணி கூடுதல் உற்சாகத்துடன் இன்று களமிறங்கும். அதே நேரத்தில் முந்திய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் லக்னோ அணி களம் இறங்கும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today LSG vs RCB Match


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->