வாழ்வா.? சாவா.? பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் பெங்களூர்.. இன்று குஜராத் அணியுடன் மோதல்.!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 15வது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு வாய்ப்பு உள்ள அணிகள் போராடி வருகின்றனர். 

இந்நிலையில், இன்று 67 ஆவது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகிறது. பெங்களூர் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 13 லீக் போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று, 6 தோல்வியுடன் 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 

தற்போது பெங்களூர் அணி ரன்-ரே ட்டில் பின் தங்கியுள்ளதால், இன்றைய ஆட்டத்தில் அதிக ரன் அல்லது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டெல்லி அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை இடம் தோல்வி கண்டால் பெங்களூரு அணி எவ்வித சிரமமுமின்றி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். 

பெங்களூர் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், ஐதராபாத், பஞ்சாப் அணிகள் பிளே-ஆப் வாய்ப்பை இழந்துவிடும். பெங்களூர் அணி தோற்றால் ஏறக்குறைய வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற கடும் நெருக்கடி பெங்களூர் அணிக்கு உள்ளது.

குஜராத் அணியை பொறுத்தவரை 13 லீக் போட்டிகளில் ஆடி 10 போட்டிகளில் வெற்றி பெற்று, 3 போட்டிகளில் தோல்வியடைந்து 20 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பிளே-ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. இன்றைய போட்டியில் குஜராத் அணி தோல்வியடைந்தாலும், எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஆகையால் பெங்களூர் அணியை வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் இன்று குஜராத் அணியை எதிர்கொள்ள உள்ளது. 

பெங்களூருக்கு எதிரான முதலாவது லீக் போட்டியில் குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் குஜராத் அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதே நேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என பெங்களூரு அணி கடுமையாக போராடும். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today GT vs RCB Match


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->