சிஎஸ்கே தக்க வைக்கும் 4 வீரர்கள் இவங்க தான்..ரகசியத்தை உடைத்த ஜடேஜா! - Seithipunal
Seithipunal


கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் 2025 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நெருங்கி வருகிறது. இதற்கிடையில், பிசிசிஐ பாரத் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை ஏலத்திற்கான புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

இதில் முக்கியமாக, அணிகளுக்கு அதிகபட்சம் 6 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அல்லது ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தி வாங்க முடியும் போன்ற பல்வேறு புதிய விதிகளை கொண்டுவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறப்பம்சமாக, 2021 இல் நீக்கப்பட்ட அன்கேப்ட் பிளேயர் விதிமுறை மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் டைம் பிரபலம் மஹேந்திர சிங் தோனி மீண்டும் களமிறங்க வாய்ப்பு பெற்றுள்ளார்.

கடந்த 2019 உலகக் கோப்பைக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் தோனி விளையாடவில்லை என்பதால், பிசிசிஐ அவரை அன்கேப்ட் வீரர் என கருதி, 4 கோடிக்கு அவரை தக்க வைத்துக் கொள்ள சிஎஸ்கே அணிக்குத் தகுதி அளித்துள்ளது.

இந்த செய்தியை முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது, தோனி மீண்டும் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவார் என்பது உறுதியாகும், மேலும் அவருக்கு நம்பர் 1 அல்லது 2 இடத்தில் விளையாட வேண்டும் என்ற ஆவல் இல்லை. மாறாக, அணியின் வளர்ச்சி, ரசிகர்களின் ஆதரவை முன்னிலையாகக் கொண்டு, குறைந்த தொகையில் விளையாடத் தயாராக உள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தோனி தவிர, ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, பதிரனா ஆகிய மூன்று முக்கிய வீரர்களையும் சிஎஸ்கே தக்க வைத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளதென ஜடேஜா தெரிவித்துள்ளார். இவர்கள் அணிக்கு முக்கியமான வீரர்களாக இருப்பதால், அணியின் எதிர்கால வெற்றிக்கு இவர்கள் முக்கியமான இடத்தை பிடிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

These are the 4 players that CSK will retain Ajay Jadeja broke the secret


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->