வங்கதேச கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தமிழன்.! - Seithipunal
Seithipunal


வங்கதேச கிரிக்கெட் அணியின் வெள்ளைப் பந்து ஆட்டங்களுக்கான பயிற்சியாளராக தமிழக முன்னாள் வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், இந்திய அணிக்காக 2000-2004 வரை 8 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். மேலும், கடந்த 6 வருடங்களாக ஆஸி அணியில் சுழற்பந்து வீச்சுப் பயிற்சியாளராகவும் உதவிப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். 

இதனை தொடர்ந்து வங்கதேச அணியின் வெள்ளைப் பந்து ஆட்டங்களுக்கான பயிற்சியாளராக ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் தொடங்கவுள்ள ஆசியக் கோப்பை டி20 போட்டி, டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆகிய முக்கியமான போட்டிகளில் வங்கதேச அணியின் பயிற்சியாளராக அவர் செயல்படவுள்ளார். 

வங்கதேச கிரிக்கெட் வாரியத்தைச் சேர்ந்த இயக்குநர் ஒருவர், டி20 உலகக் கோப்பை வரை ஸ்ரீராமைப் பயிற்சியாளராக நியமித்துள்ளோம். வங்கதேச டெஸ்ட் ஆட்டங்களுக்கான பயிற்சியாளராகத் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த  ரஸ்ஸல் டொமினிகோ தொடர்வார். என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilan as coach of Bangladesh cricket team


கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?Advertisement

கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?
Seithipunal