#T20WorldCup : இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா இந்தியா.? இங்கிலாந்து அணியுடன் இன்று மோதல்.! - Seithipunal
Seithipunal


டி20 உலக கோப்பை 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.

ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில், சூப்பர் 12 சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடைபெற உள்ளது.

இதில் சூப்பர் 12 சுற்றுகளின் முடிவில் நியூஸிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது. அதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.



அதனைத் தொடர்ந்து இன்று மதியம் 1.30 மணிக்கு அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து  அணிகள் மோதுகின்றன.

மழை குறுக்கீடு

இந்த நிலையில் நேற்று அடிலெய்டு மைதானத்தில் மழை பெய்ததால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து அடிலெய்டு நகர வானிலை வெளியிட்டுள்ள அறிக்கையில், டாஸ் போடும் நேரம் வரை மழை பெய்ய 7% சதவீதம் மட்டுமே வாய்ப்புள்ளது. அதேபோல் போட்டி தொடங்கும் போது வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸ் ஆக குறையும் என்றும் மழைக்கான வாய்ப்பு 5% சதவீதம் மட்டுமே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி20 போட்டிகளில் இதுவரை நேருக்கு நேர்

டி20 போட்டிகளில் இந்தியா இங்கிலாந்து அணிகள் இதுவரை 22 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் இந்தியா 12 போட்டிகளிலும், இங்கிலாந்து 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

டி20 உலக கோப்பையில் இதுவரை நேருக்கு நேர்

டி20 உலக கோப்பையில் இவ்விரு அணிகளும் 3 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், 2 போட்டிகளில் இந்திய அணியும், ஒரு போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 World Cup IND vs ENG semifinal match today


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->