#BigBreaking || புள்ளி பட்டியலை தலைகீழாய் மாற்றிய பங்களாதேஷ்., சற்றுமுன் வாழ்வா சாவா பலப்பரீட்சை தொடங்கியது.! - Seithipunal
Seithipunal


டி20 உலகக் கோப்பை தொடர் கடந்த 17ஆம் தேதி தொடங்கி பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் சூப்பர் 12 என்று அழைக்கப்படும் கோப்பையை வெல்வதற்கான தொடரில் பங்கேற்பதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

இந்த தகுதி சுற்று ஆட்டத்தில் 8 அணிகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. இதில், குரூப் பி பிரிவில் கடைசி இரு ஆட்டங்கள் இன்று நடந்து கொண்டு இருக்கிறது. 

மலை 3.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியும் vs பப்புவா நியூ கினியா அணியும் மோதின. முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 181 ரன்களை குவித்தது.

இதனையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாப்புவா நியூ கினியா அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால் வங்கதேச அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

அதுமட்டுமல்லாமல் ரன்ரேட் விகித அடிப்படையில் புள்ளி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து, சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. இதன் காரணமாக இரண்டாவது இடத்தில் உள்ள ஸ்காட்லாந்து அணிக்கும், 3வது இடத்தில் உள்ள ஓமன் அணிக்கும் இடையே பல பரிட்சை தற்போது தொடங்கியுள்ளது.

ஸ்காட்லாந்து, ஓமன் அணிகளுக்கு இடையேயான இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி தான் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும் என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருநாட்டு ரசிகர்களும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

குறிப்பு : பங்களாதேஷ், பப்புவா நியூ கினியா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துக்கு முன்னதாக, புள்ளி பட்டியலில் ஸ்காட்லாந்து முதலிடத்திலும், ஓமன் நாடு இரண்டாவது இடத்திலும், பங்களாதேஷ் அணி 3-வது இடத்திலும் இருந்தது. 
பங்களாதேஷ் அணி அபார வெற்றி பெற்றதன் மூலம் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து, புள்ளி பட்டியலை தலைகீழாக மாற்றி உள்ளது. அது மட்டுமல்லாமல் ஸ்காட்லாந்து அணிக்கு வாழ்வா சாவா என்ற ஒரு நிலையை உருவாக்கியுள்ளது. ஸ்காட்லாந்து அணி சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெற்று விடும் என்ற நிலை மாறி, அந்த அணிக்கு வாழ்வா சாவா என்ற ஒரு நிலை உருவாகியுள்ளது.
 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

t20 world cup Bangladesh qualify in super 12


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->