எதிர்பாராத டுவிஸ்ட் : பரபரப்பான இறுதி கட்டத்தில் இலங்கை - நியூசி டெஸ்ட்! சீட்டின் நுனியில் இந்தியா, இலங்கை ரசிகர்கள்!  - Seithipunal
Seithipunal


நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்று வரும் இலங்கை நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது ஐந்தாவது நாள் இறுதிக்கட்டத்தில் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. போட்டி சமநிலையில் முடியுமா? அல்லது நியூசிலாந்து வெற்றி பெறுமா? என்ற பரபரப்பான நிலையில் இருக்கிறது. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் இந்தியா இலங்கை அணிகளும் போட்டியிட்டு வருகின்றன. முதல் அணியாக ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்றுவிட்ட நிலையில், இரண்டாவது அணியாக யார் தகுதி பெறுவது என்பதில் இந்தியா இலங்கை அணிகள் இடையே போட்டி நிலவுகிறது. தற்போது அகமதாபாத்தில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய போட்டியில் இந்திய அணி வெற்றி பெறாவிட்டால் நியூசிலாந்து இலங்கை டெஸ்ட் தொடரின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. 

இந்த நிலையில் அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியானது டிராவை நோக்கியே நகர்ந்து கொண்டிருப்பதால் இலங்கை நியூசிலாந்து அணியின் போட்டிகளின் முடிவானது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. நேற்று நான்காம் நாள் ஆட்டம் நேரம் முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழந்து 28 ரன்கள் எடுத்திருந்தது. இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் நியூசிலாந்து வெற்றி பெறலாம், இலங்கையும் வெற்றி பெறலாம் அல்லது சமனிலும்  முடியலாம் என்ற நிலையில் தொடங்க இருந்தது. ஆனால் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் உணவு இடைவேளை வரை தொடங்கப்படவே இல்லை. 

பின்னர் மழை விட்ட பிறகு ஆடுகளம் சரி செய்யப்பட்டு, 53 ஓவர்கள் மட்டுமே வீசப்படும் என அறிவிக்கப்பட்டு ஆட்டமானது தொடங்கியது. ஆரம்பத்தில் மிதமான வேகத்தில் நியூசிலாந்து ஆடினாலும் சீரான இடைவெளியில் இலங்கை விக்கெட்டுகளை எடுத்துக் கொண்டே இருந்தனர். விக்கெடுகளை அதிகம் இழக்காமல் தங்கள் பங்களிப்பை நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் அளித்து வந்தனர். டாம் லதாம் 24 ரன்களிலும்,  நிக்கோலஸ் 20 ரன்களிலும் ஆட்டம் இழக்க, வில்லியம்சன் ஒரு பக்கம் நின்று நங்கூரமாக ஆடிக் கொண்டிருக்கிறார.  மறுமுனையில் வந்த டேரல் மிச்சல் ஒருநாள் போட்டிகளைப் போல அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து நியூசிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்ற நிலையை உருவாக்கி இருக்கிறார். 

257 ரன்கள் 53 ஓவர்களில் எடுப்பது கடினம் என கருதப்பட்ட நிலையில், இன்னும் 8 ஓவர்களில் 53 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையை டேரல் மிச்சலின் அதிரடியானது உருவாக்கியிருக்கிறது. சற்று முன்பு வரை நியூசிலாந்து அணி 62 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 232 ரன்களை குவித்துள்ளது. மிச்சேல் 81 ரன்கள் எடுத்து சற்றுமுன் ஆட்டமிழந்து இருக்கிறார். 

வில்லியம்சன் 90 ரன்கள் உடனும் டாம் ப்ளண்டல் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் நிற்கின்றார்கள். இன்னும் 8 ஓவர்கள் எஞ்சியிருக்கும் நிலையில் 53 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது என்பதால் நியூசிலாந்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது. நியூசிலாந்து வெற்றி பெற்றால் இந்தியா பைனலுக்கு முன்னேறிடும் என்பதால் இந்திய ரசிகர்கள் ஆவலுடன் இப்போட்டியை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Suspense thriller in Srilanka New Zealand !st test match at Christchurch


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->