மகளிர் சேலஞ்ச் டி20 கிரிக்கெட் போட்டி! 3வது முறையாக சூப்பர் நோவாஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.! - Seithipunal
Seithipunal


மகளிர் சேலஞ்ச் டி20 கிரிக்கெட் போட்டியில் மூன்றாவது முறையாக சூப்பர் நோவாஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

மகளிருக்கான 4வது சேலஞ்ச் டி20 கிரிக்கெட் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சூப்பர்நோவாஸ் மற்றும் வெலாசிட்டி அணிகள் மோதின.

முதலில் டாஸ் வென்ற வெலாசிட்டி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய சூப்பர் நோவாஸ் அணி, அதிகபட்சமாக பாட்டின் 62 ரன்களும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 43 ரன்கள் எடுத்த நிலையில் 20 ஓவர் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு, 165 ரன்கள் எடுத்தது.

இதைத்தொடர்ந்து 166 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெலாசிட்டி அணியில் அதிகபட்சமாக லாரா வெல்வெட் 65 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து 20 ஓவர் முடிவில் வெலாசிட்டி அணி 8 விக்கெட்டுகளை இழந்து, 161 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் 4 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் நோவாஸ் அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Super novas won woman challenge T twenty cricket


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->