''சிஎஸ்கே உடனான பயணம் சிறப்பானது''; சிஎஸ்கே பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிய ஸ்டீபன் பிளெமிங் உருக்கமான பதிவு..! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள அணி சென்னை சூப்பர் கிங்ஸ். தற்போது சி.எஸ்.கே அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஸ்டீபன் பிளெமிங் விலகியுள்ளார். இந்த முடிவை சிஎஸ்கே மற்றும் பிளெமிங் தரப்பு கலந்தாலோசித்த பின்பே இறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் எப்போதும் முதலிடத்தில் இருக்கும். கடந்த 03 ஆண்டுகளுக்காக சற்று சரிவை சந்தித்து இருந்தாலும் அணியின் லெகசிக்கும் என்றும் குறைவில்லை. சென்னை அணி இதுவரை ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அதோடு 12 முறை வரை பிளே-ஆப் சுற்றிலும் 10 முறை இறுதி போட்டியில் விளையாடியுள்ளது. ஐபிஎல் பட்டம் மட்டுமல்லாது சாம்பியன்ஸ் லீக் பட்டமும் இரண்டு முறை சிஎஸ்கே வென்றுள்ளது.

கடைசியாக கடந்த 2023-இல் ஐபிஎல் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றது.  அதற்கடுத்த மூன்று சீசன்களாக அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் தடுமாறி வருகிறது. அதற்கு பயிற்சியாளர் பிளெமிங் மீது அதிக விமர்சனங்கள் எழ தொடங்கியது. இந்நிலையில், பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து பிளெமிங் விலகியுள்ளார்.

53 வயதான ஸ்டீபன் பிளெமிங், கடந்த 2008 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய நிலையில், அதன் பின்னர் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆனார்.

2009 சீசன் முதல் 2026 சீசன் வரையில் அந்தப் பொறுப்பில் அவர் தொடர்ந்தார். இதில் ஐபிஎல் பட்டம் மட்டுமல்லாது சாம்பியன்ஸ் லீக் பட்டமும் இரண்டு முறை சிஎஸ்கே வென்றுள்ளது. 12 முறை பிளே-ஆப் மற்றும் 10 முறை ஐபிஎல் இறுதிப் போட்டியில் அவரது பயிற்சியின் கீழ் சிஎஸ்கே விளையாடி உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வகித்து வரும் எஸ்ஏ20 தொடரில் ஜேஎஸ்கே அணி மற்றும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சியாளராகவும் பிளெமிங் செயல்பட்டார். இந்த நிலையில்தான் சிஎஸ்கே பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

இது குருத்து பிளமிங் கூறுகையில்; ''18 ஆண்டுகள் என்பது விளையாட்டு வாழ்வில் என்றென்றும் மறக்க முடியாத ஒன்று. நன்றியுடன் விடைபெறுகிறேன். பயிற்சியாளராக எனது பயணத்தில் சிஎஸ்கே உடனான பயணம் சிறப்பானது. அதன் மூலம் நாங்கள் சாதித்ததை எண்ணி பெருமை கொள்கிறேன். அந்த நினைவுகள் எனது நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும்'' உருக்கமாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Stephen Flemings heartfelt post on stepping down as CSK coach


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->