இலங்கை செல்லும் இந்திய அணியில் மினி மும்பை இந்தியன்ஸ் அணி! சிஎஸ்கே வீரர்கள் மூவருக்கும் வாய்ப்பு!  - Seithipunal
Seithipunal


இந்தியா ஸ்ரீலங்கா அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடும் இந்திய அணி ஆனது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். அணியின் துணை கேப்டனாக புவனேஸ்வர் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னணி வீரர்கள் கொண்ட அணியானது இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இரண்டாம் கட்ட அணியானது இலங்கைக்கு சுற்றுப்பயணம் கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

2-வது கட்ட அணியை இலங்கைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்து அதன்படி இந்த அணியானது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியானது முழுக்க முழுக்க இளம் வீரர்களைக் கொண்ட அணியாக இருக்கிறது. ஐபிஎல்லில் ஜொலித்த வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களில்  ஐந்து பேர் மும்பை அணியின் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யகுமார் யாதவ், ஹார்டிக் பாண்ட்யா, இஷான் கிஷன்,  ராகுல் சாஹர், கிருனல் பாண்ட்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதற்கடுத்தபடியாக டெல்லி அணியில் இருந்து, ஷிகர் தவான் (கேப்டன்), பிருத்வி ஷா இடம்பெற்றுள்ளனர். 

சென்னை அணியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட், கே கவுதம், தீபக் சஹார் ஆகியோரும், பெங்களூர் அணியில் தேவதத் படிக்கல், நவ்தீப் சைனி, சாஹல் ஆகியோரும், கொல்கத்தா அணியில் வருண் சக்ரவர்த்தி,  நிதிஷ் ராணா, குல்தீப் யாதவ் ஆகியோரும், ஹைதரபாத் அணியில்  மனிஷ் பாண்டே, புவனேஷ்வர் குமார் (துணை கேப்டன்). ராஜஸ்தான் அணியில் இருந்து சஞ்சு சாம்சன், சேதன் சகரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பஞ்சாப் அணியில் இருந்து வலைப் பந்து வீச்சாளராக அர்ஷ்தீப் சிங் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

srilanka tour of indian team have mini Mumbai indian team itself


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->