இலங்கை கிரிக்கெட்டினை சீர்குலைப்பவர் இவர்தான்: முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!
Sri Lankan cricket disrupting one person Ex player allegation
உலக கோப்பையில் இந்தியாவுடன் இலங்கை அணி விளையாடி மோசமான நிலையில் தோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகளை நீக்கியும் வாரிய நிர்வாகத்துக்காக 7 பேர் கொண்ட குழுவை அமைத்தும் அந்த நாட்டு விளையாட்டு துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இலங்கை கிரிக்கெட் விவகாரத்தில் அந்நாட்டு அரசு தலையீட்டை அடுத்து ஐசிசி உறுப்பினர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது.
மேலும் ஐசிசி இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தொடர்பு செயல்பாடுகளை வைத்து சஸ்பெண்ட் நடவடிக்கை குறித்து மறு பரிசீலனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்நாட்டு முன்னாள் இலங்கை வீரரும் உலக கோப்பையை வென்ற அணி தலைவருமான அர்ஜுன ரணதுங்கே அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, ''இந்தியாவில் உள்ள ஒருவரால் தான் இலங்கை கிரிக்கெட் சீர்குலைந்து வருகிறது.
இலங்கை அணியில் உள்ள முக்கியமான அதிகாரிகளுக்கும் ஜெய் ஷாவுக்கும் தொடர்புள்ளது. ஜெய்ஷா இலங்கை அணியை நடத்துகிறார். அவரது அழுத்தத்தின் காரணமாகத்தான் இலங்கை கிரிக்கெட் அணி அறிந்து வருகிறது.
இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் என்பதால் அவருக்கு அதிகப்படியான அதிகாரம் உள்ளது'' என தெரிவித்துள்ளார்.
English Summary
Sri Lankan cricket disrupting one person Ex player allegation