டி20 உலகக் கோப்பை: தனியான போராடிய தலிவால்; 57 ரன்களில் கனடாவை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா..!
South Africa defeated Canada by 57 runs in the T20 World Cup match
20 காய்கள் பங்கேற்றுள்ள 10 வது டி20 உலகக் கோப்பை இந்தியா -இலங்கையில் நடைபெற்று வருகிறது. இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 09 வது லீக் ஆட்டத்தில், தென்ஆப்பிரிக்கா- கனடா அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற கனடா அணி, முதலில், பந்து வீச்சை தெர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர் மற்றும் கேப்டன் மார்க்கிரம் உடன், டி காக் இறங்கினார். டி காக் 22 பந்தில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரியான் ரிக்கெல்டன் 21 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மார்கிராம் 32 பந்தில் 10 பவுண்டரி, 1 சிக்சருடன் அரசிச்சதம் கடந்து 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெவால்டு பிரேவிஸ் 06 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். 05-வது விக்கெட்டுக்கு டேவிட் மில்லர் உடன் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடியது. மில்லர் ஆட்டமிழக்காமல் 23 பந்தில் 39 ரன்களும், ஸ்டப்ஸ் ஆட்டமிழக்காமல் 19 பந்தில் 34 ரன்களும் அடித்தனர். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 04 விக்கெட் இழப்பிற்கு தென் ஆபிரிக்கா 213 ரன்கள் குவித்துள்ளது.

214 என்ற கடின இலக்குடன் களமிறங்கிய கனடா வின் தொடக்க ஆட்டக்காரர் மற்றும் கேப்டன் முதல் பந்தில் அட்டமிலோஅந்தர். அடுத்துவந்த வீரர்களில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர், கனடா சார்பில் நவ்நீத் தலிவால் அதிகபட்சமாக 49 பந்துகளில் 64 ரன்கள் குவித்து தனி ஒருவனாக போராடி வெளியேறினார். ஹர்ஸ் தாக்கர் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், 20 முடிவில் 08 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்து கனடா தோல்வியை தழுவியது. 57 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா முதல் வெற்றியை பதிவு செய்தது.
தென் ஆப்பிரிக்காவின் லுங்கி நிக்டி 4 விக்கெட்களை வீழ்த்தினார். கனடா அணி சார்பில் அன்ஷ் படேல் 03 விக்கெட்டினை வீழ்த்தினார்.
English Summary
South Africa defeated Canada by 57 runs in the T20 World Cup match