02வது ஒரு நாள் போட்டி: தோல்விக்கு காரணம் என்ன..? சுப்மன் கில் ..!
Shubman Gill on the reason for the defeat in the 2nd ODI
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் சனிக்கிழமை சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அடிலெய்டில் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆஸி., அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசியது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்திருந்தது.
இந்திய வீரர்களும் சீரான இடைவேளைகளில் விக்கெட்டை இழந்ததும், சில கேட்ச்களை தவறவிட்டதும் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக மாறியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 22 பந்துகள் எஞ்சிய நிலையில், இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறுகையில்;

நாங்கள் பேட்டிங்கில் போதுமான அளவு ரன்களை எடுத்து இருந்தோம் என்று நினைக்கின்றேன். ஆனால், பில்டிங்கில் இரண்டு கேட்ச்களை நாங்கள் கோட்டை விட்டோம். அது தோல்விக்கு முக்கிய காரணமாக மாறிவிட்டது. அதுவும் இல்லாமல் பந்து கொஞ்சம் பழையதாக மாறியவுடன், ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறியது. முதல் ஒருநாள் போட்டியில் தான் டாஸ் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. இந்த போட்டியில் டாஸ் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று நினைக்கின்றேன்.
இரு அணிகளுமே கிட்டத்தட்ட 50 ஓவர்கள் முழுமையாக விளையாடிவிட்டோம். முதல் 10, 15 ஓவர்களுக்கு பிறகு ஆடுகளம் நன்றாக செட்டில் ஆக இருந்தது. ரோகித் சர்மா சிறிது காலம் கழித்து அணிக்கு திரும்பி இன்று ரன்களை சேர்த்தார். அவர் விளையாடும் விதம் பார்க்கும்போது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தது.

அவர் இன்னும் பெரிய ரன்களை சேர்த்து இருப்பார். அது மிஸ் ஆகிவிட்டது என்று நினைக்கின்றேன்' என கில் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் கில் மற்றும் விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்துள்ளனர். இன்றைய போட்டியில் கூட இந்திய அணி பவர்பிளேவில் வெறும் 29 ரன்கள் மட்டுமே அடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Shubman Gill on the reason for the defeat in the 2nd ODI