முன்கூட்டியே அனுப்பப்பட்ட சிவம் துபே! பொல்லார்ட்டை கதறவிட்ட சம்பவம்!  - Seithipunal
Seithipunal


திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையேயான இரண்டாவது இருபது ஓவர் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்தியா, கடந்த போட்டியை போலவே இந்த ஆட்டத்திலும், தொடக்கம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. கடந்த ஆட்டத்தில் ஆட்டத்தில் ரோகித் சர்மா விரைவாக வெளியேற, இந்த ஆட்டத்தில் கடந்த ஆட்டத்தில் அரை சதமடித்த லோகேஷ் ராகுல் 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு யாருமே எதிர்பாராத வேளையில் ஆல்-ரவுண்டரான சிவம் துபே முன்கூட்டியே களமிறக்கப்பட்டார்.

இந்த முயற்சியானது பலன் அளிக்குமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆரம்பத்தில் ரோகித் சர்மாவுடன் சேர்ந்த சிவம் நிதானமாக விளையாட, பின்னர் சில பவுண்டரிகளை அடித்தார். அதற்கிடையே ரோகித் சர்மா இந்த ஆட்டத்திலும் சொதப்பலாக விளையாடி 15 ரன்களுடன் கிளீன் போல்டாகி வெளியேறினார். அவர் 18 பந்துகளை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. அப்போது இந்திய கேப்டன் விராட் கோலி களமிறங்கினார்.

மறுமுனையில் அமைதியாக விளையாடிக் கொண்டிருந்த சிவம் துபே பொல்லார்ட்டின் ஒரே ஓவரில் 3 சிக்சர்கள் விளாசி அவரை அலறவிட்டார். அதோடில்லாமல் 27 பந்துகளில் தன்னுடைய முதல் அரை சதத்தை அடித்து அசத்தியுள்ளார். அடுத்த ஓவரில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 30 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shivam dube scored his maiden half century in T20I


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal