'இந்த 5 பெண்கள் தான் என் வாழ்க்கையை மாற்றியவர்கள்'! சச்சின் வெளியிட்ட வீடியோ!! - Seithipunal
Seithipunal


மார்ச் 8 ஆம் தேதியான இன்று உலகமெங்கும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் அவரது வாழ்க்கையின் முக்கியமான பெண்களை புகழ்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், தனது தாய், அத்தை, மனைவி, மாமியார் மற்றும் மகள் ஐந்து பேரும் அவரது வாழ்க்கையை மாற்றியமைத்த பெண்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் அந்த வீடியோவில் சச்சின் பேசுகையில், 'சிறுவயதில் தனது தாய் மிகவும் கவனமுடன் பார்த்து கொண்டதாகவும், பிறகு நான்கு ஆண்டுகள் கிரிக்கெட் கற்றுக் கொள்ள அத்தை வீட்டில் தங்கியிருந்தபோது, அத்தை தாயாக இருந்த பார்த்து கொண்டதாகவும் கூறியிருக்கிறார்.

பின்னர் அவரது மனைவி அஞ்சலி, நீங்கள் இந்தியாவிற்காக தொடர்ந்து விளையாடுங்கள் குடும்பத்தை நான் பார்த்து கொள்கிறேன் என்று என் சுமையை பாதி அவள் ஏற்றுக் கொண்டார். அஞ்சலியின் அம்மா அவர்களும் எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தனர். என் மகள் சாரா தற்போது அனைத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த பெண்மணியாக வளர்ந்து வருகிறார் என்று அதில் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sachin tendulkar about 5 important girl in his life


கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
Seithipunal