கையிலிருந்த வெற்றியை ராஜஸ்தான் அணிக்கு தாரைவார்த்த பெங்களூர் அணி.!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 15 வது சீசனில் நேற்று 39-வது லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர்அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. 

பெங்களூரு அணியின் பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்தனர். ராஜஸ்தான் அணியின் பலமாக கருதப்பட்ட ஜோஸ் பட்லர் 8 ரன்களில் வெளியேறினார். படிக்கல், அஸ்வின், சஞ்சு சாம்சன், ஹெட்மையர் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். 

ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட எட்டாது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரியான் பராக் சிறப்பாக விளையாடி 31 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களை எடுத்தது. 

145 ரன்கள் எடுத்து வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி 9 ரன்களில் அவுட்டானார். ஃபாஃப் டு பிளெசிஸ் 23 ரன்களில் வெளியேறினார். மேக்ஸ்வெல் டக் அவுட் ஆனார். தினேஷ் கார்த்திக் அணியை வெற்றி பெறச் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ரன் அவுட் ஆகி பெங்களூர் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார். 19.3 ஓவரில் பெங்களூர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணி சார்பில் குல்தீப் சென் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அஸ்வின் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RR vs RCB Match RR Win


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->