மும்பை வான்கடே மைதானத்தில் ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்ட் திறப்பு; ரசிகர்கள் கொண்டாட்டம்..!
Rohit Sharma stand inaugurated at Mumbai Wankhede Stadium
இந்திய கிரிக்கெட் அணியின் நச்சிர வீரர் மற்றும் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா. ரோகித் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்ததை தொடர்ந்து கிங் கோலியும் ஓய்வை அறிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக கேப்டன் ரோகித் சர்மா பல கோப்பைகளை வென்றுகொடுத்துள்ளார். அத்துடன் அணியின் தொடக்க வீரராக களமிறங்கி பல சாதனைகளை படைத்துள்ளார். 'ஹிட்மேன்' ரோகித் சர்மா ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். மும்பை அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா தலைமையில் மும்பை அணி 05 கோப்பைகளை வென்றுக்கொடுத்துள்ளார்.

இந்நிலையில், ரோகித் சர்மா பெயரில் மும்பை வான்கடே மைதானத்தில் ஸ்டாண்டு இன்று திறக்கப்பட்டுள்ளது. அந்த ஸ்டாண்டை ரோகித் சர்மாவின் அப்பா,அம்மா மஹாராஷ்டிரா முதலமைச்சர்தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர்.
அத்துடன், மும்பை வான்கடே மைதானத்தில் அஜித் வடேகர், சரத் பவார் பெயரிலும் புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்பட்டது. குறித்த 03 பேரின் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் 03 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்பட்டன.
English Summary
Rohit Sharma stand inaugurated at Mumbai Wankhede Stadium