அடுத்தடுத்த வெற்றிகள்.. புதிய உலக சாதனை படைத்த ரோகித் சர்மா.!!
rohit sharma new world record for t 20 match
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டியில் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 50 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
கொரானா தொற்று காரணமாக டெஸ்ட் போட்டியில் விளையாடாத ரோகித் சர்மா நேற்றைய போட்டியில் இந்திய அணியை வழி நடத்தினர். இந்த போட்டியின் வெற்றியின் மூலம் ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணியின் முழு நேர கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்ட பிறகு அவர் தலைமையில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வி அடையவில்லை. கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்ற பிறகு டி20 போட்டியில் இந்திய அணி எதிர் கொண்ட நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணி மற்றும் இப்போது இங்கிலாந்தையும் தொடர்ச்சியாக வீழ்ச்சி சாதனை படைத்திருக்கிறார்.
இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக 13 போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
English Summary
rohit sharma new world record for t 20 match