#T20WorldCup : அரையிறுதி போட்டியில் தினேஷ் கார்த்திக்கை விளையாட வைக்கக்கூடாது - ரவி சாஸ்திரி.! - Seithipunal
Seithipunal


ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில், சூப்பர் 12 சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடைபெற உள்ளது.

இதில் சூப்பர் 12 சுற்றுகளின் முடிவில் குரூப்-1 பிரிவு புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2 பிரிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

அதனைத் தொடர்ந்து நாளை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளும், நவம்பர் 10ம் தேதி நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து  அணிகள் மோதுகின்றன.

இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ஒரு சில இடங்களில் குறைகள் இருப்பதால் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார். ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடியிருந்தாலும் டி20 உலக கோப்பையில் பெரிதாக எந்த போட்டியிலும் அவர் ரன் அடிக்கவில்லை. அதனால் தினேஷ் கார்த்திக் பதிலாக ரிஷப் பந்த்தை களம் இறக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தினேஷ் கார்த்திக்கு பதிலாக  ரிஷப் பந்த் தான் விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் தினேஷ் கார்த்திக் ஒரு சிறந்த வீரர். ஆனால் இங்கிலாந்து அல்லது நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக ஒரு இடது கை ஆட்டக்காரர் தேவை என்று நான் நினைக்கிறேன். இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்த ஒரு நாள் தொடரில் சிறப்பாக விளையாடியவர் ரிஷப் பந்த்.

மேலும், ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவம் இருக்கிறது. இந்திய அணியில் அனைவரும் வலது கை ஆட்டக்காரராக இருப்பதால் ஒரு இடது கை பேட்ஸ்மேனை களம் இறக்க வேண்டியது அவசியமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rishab pant will play in the semi-final against England Ravi Shastri


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->