பிளே-ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா பஞ்சாப்.? இன்று பெங்களூர் - பஞ்சாப் அணிகள் மோதல்.!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 60 வது லீக் போட்டியில் ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகிறது.

பெங்களூர் அணி இந்த சீசனில் விளையாடிய 12 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று, 5 போட்டிகளில் தோல்வியடைந்து 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் பெங்களூர் அணி 16 புள்ளிகளுடன் பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய வாய்ப்புள்ளது. பெங்களூர் அணியை பொறுத்தவரை டு பிளெசிஸ், தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த இரண்டு போட்டிகளில் கோலியும் மீண்டும் தனது பேட்டிங் திறமையை நிரூபித்துள்ளார். பந்துவீச்சை பொறுத்தவரை வனிந்து ஹசரங்கா, ஹர்சல் படேல் விக்கெட்களை எடுத்து வருகின்றனர். 

பஞ்சாப் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று, 6 போட்டிகளில் தோல்வியடைந்து, 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. பிளே-ஆஃப் தக்கவைத்துக்கொள்ள பஞ்சாப் அணி மீதமுள்ள 3 போட்டியிலும் நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஒரு போட்டியில் தோல்வி அடைந்தாலும் பஞ்சாப் அணி பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்து விடும். 

பஞ்சாப் அணியை பொறுத்தவரை ஷிகர் தவான், லிவிங்ஸ்டோன் நல்ல பார்மில் உள்ளனர். பந்துவீச்சில் ரபாடா, ராகுல் சாஹர் தவிர மற்ற யாரும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு விக்கெட்களை எடுக்கவில்லை. இன்றைய போட்டி பஞ்சாப் அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இன்று இரவு 7 மணிக்கு மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இரு அணிகளும் மோதவுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RCB vs PBKS Match Today


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->