டெஸ்ட் கிரிக்கெட்டில் 73 ஆண்டு கால சாதனையை சமன் செய்துள்ள 'சார்' ரவீந்திர ஜடேஜா..! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 03-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ஆம் தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கியது. முதல் இன்னிங்சில் இரு அணிகளும் தலா 387 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆன நிலையில், 02-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 62.1 ஓவர்களில் 192 ரன்னில் ஆல் அவுட்டானது.

இங்கிலாந்து அணி சார்பாக  ஜோ ரூட் 40 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் அபாரமாக பந்து வீசி 04 விக்கெட்டும், பும்ரா, முகமது சிராஜ் தலா 02 விக்கெட்டும் கைப்பற்றினர்.

193 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 74.5 ஓவர்களில் 170 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இன்ற நாள் ஆட்டத்தில் தனி ஆளாக போராடிய ஜடேஜா 61 ரன்களுடன் இறுதிவரை களத்தில் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர், ஸ்டோக்ஸ் தலா 03 விக்கெட்டுகளும், பிரைடன் கார்ஸ் 02 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இந்த போட்டியின் மூலம் ஜடேஜா சாதனை படைத்துள்ளார். அதாவது, 02 இன்னிங்ஸ்களிலும் ஜடேஜா 50+ (72 & 61 ரன்கள்) ரன்கள் அடித்துள்ளார். இதன் மூலம் லார்ட்சில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 50+ ரன்கள் அடித்த 02-வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் 1952-ஆம் ஆண்டு இந்திய வீரரான வினோ மன்கட் லார்ட்சில் நடைபெற்ற ஒரு டெஸ்டின் 02 இன்னிங்ஸ்களிலும் 50+ (72 & 184) ரன்கள் அடித்திருந்தார். அவரின் 73 ஆண்டு கால சாதனையை ரவீந்திர ஜடேஜா தற்போது சமன் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ravindra Jadeja equals 73 year old record in Test cricket


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->