#IPL2023 : இறுதிப்போட்டியை கெடுக்கும் மழை.. சென்னைக்கு ஆப்பு.. குஜராத்துக்கு வாய்ப்பு.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானத்தில் தற்போது மழை பெய்து வருகிறது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் அனைத்து போட்டிகளும் முடிவடைய உள்ள நிலையில், இன்று இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இதில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

இதனையடுத்து கடந்த 24ம் தேதி நடைபெற்ற குவாலிஃபயர் 1 போட்டியில் குஜராத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிஃபயர் 2 போட்டிக்கு முன்னேறியது.

அதனைத் தொடர்ந்து 26ம் தேதி இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற குவாலிஃபயர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

இதில் ஐபிஎல் தொடரின் பலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் ஐபிஎல் ரசிகர்களுடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மழை குறுக்கீடு

இந்த நிலையில் இறுதி போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானத்தில் தற்போது இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இது ஐபிஎல் ரசிகர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த மழை 7.30 அல்லது 8 மணி வரை மட்டுமே நீடிக்கும் என கூறப்படுகிறது. அதன்பிறகு அதன் பிறகு போட்டி தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து போட்டி தடைபட்டால் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், ஒருவேளை மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டால் லீக் போட்டியில் அதிக புள்ளி எடுத்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அந்த வகையில் மழையால் பாதிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டால் குஜராத் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rain intruptted in IPL final in Ahamedabad stadium


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->