மீண்டும் விலகிய மழை.. தயாராகும் ஆடுகளம்.. சிக்ஸர் மழை பொழியுமா சிஎஸ்கே ..!! - Seithipunal
Seithipunal


நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டி நேற்று மழையால் கைவிடப்பட்ட நிலையில் இன்று மீண்டும் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் வில்லும், சகாவும் அபாரமாக விளையாடி நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மோசமான பில்டிங் மற்றும் பவுலிங்காலும், தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் அதிரடி ஆட்டத்தாலும் குஜராத் அணியின் ஸ்கோர் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சன் 47 பந்துகளில் 96 ரன்களை குவித்தார். இன்னிங்ஸ் இடைவேளையின் போது மழை குறுக்கட்டதால் சிஎஸ்கே அணி களம் இறங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து 215 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி வெறும் 3 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் மழை மீண்டும் குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில் தற்பொழுது மழை நின்றதால் மைதானத்தில் போடப்பட்டிருந்த அனைத்து தார்பாய்களும் அகற்றப்பட்டு மழைநீர் வெளியேற்றும் பணியானது நடைபெற்று வருகிறது. 

அதன்படி சரியாக 10:45 மணிக்கு ஆடுகளத்தை நடுவர்கள் சோதனை செய்து மீண்டும் போட்டி தொடங்க வாய்ப்புள்ளது. இமாலய இலக்கை நோக்கி ஆடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சிக்ஸர் மழை பொழிவார்களா என சென்னை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rain has stopped the IPL final likely to resume soon


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->