சூரியகுமார் யாதவ் குறித்து மனந்திறந்த ராகுல் டிராவிட்! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் இன்றுடன் நிறைவடைந்தது. இன்று நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய சூர்யா குமார் யாதவ் 61 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இந்த போட்டியின் முடிவில் மெல்பர்னில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் டிராவிட் சூரியகுமார் பேட்டிங் குறித்து பேசி உள்ளார். அவர் அளித்த பேட்டியில் "சூரியகுமார் யாதவ் முற்றிலும் தனித்துவமானவர் என்று நான் நினைக்கிறேன். எப்பொழுதும் அவர் கவலையின்றி மகிழ்ச்சியாக உள்ளார். நல்ல பார்மில் இருக்கும் போது அவரின் பேட்டிங்கை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். 

அவர் 25 பந்துகளில் 61 ரன்கள் அடித்தது என்னால் நம்ப முடியவில்லை. இதன் காரணமாக தான் அவர் டி20 போட்டியில் உலகின் நம்பர் ஒன் இடத்தைப் பிரித்துள்ளார். இந்த தொடரில் இந்திய அணிக்காக 225 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார். விராட் கோலி மட்டுமே அவரைவிட அதிகமாக ரன் சேர்த்துள்ளார். 

அவர் தனது உடல் நலனில் அதிக கவனம் எடுத்துக் கொள்கிறார். அவர் அதிக நேரம் உடற்பயிற்சிக்காக செலவிடுவதை பார்க்கும் பொழுது கடின உழைப்புக்கான வெகுமதியை அவர் பெறுகிறார் என்று நான் நினைக்கிறேன். அவருடைய பேட்டிங் நீண்ட நாட்கள் நிலைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்" என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rahul Dravid spoke about Suryakumar Yadav


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->