இந்திய அணி தோல்வி.. பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதன்மூலம் தென்ஆப்பிரிக்கா அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது. 

போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, முக்கிய நேரங்களில் இந்திய அணி சிறப்பாக விளையாடவில்லை. கேஎல் ராகுல் இப்போதுதான் தொடங்கி இருக்கிறார். அவர் மிகவும் கண்ணியமாக செயல்பட்டார் என்று நினைக்கிறேன். 

கேப்டனாக தொடர்ந்து சிறப்பாக வருவார். நாங்கள் அதிக ஒருநாள் கிரிக்கெட் விளையாட வில்லை. நாங்கள் கடைசியாக மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடினோம். இந்த தொடர் நல்ல அனுபவமாக அமைந்தது. 2023 உலகக்கோப்பைக்கு இன்னும் நிறைய நேரம் உள்ளது .அதற்கு முன்பு நாங்கள் நிறைய ஒருநாள் போட்டிகளை விளையாடுவோம். 

அதற்கு முன்பு நாங்கள் அதிக அளவில் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவோம். இந்தியா எதிர்காலத்தில் சிறப்பாக இருக்கும். அடுத்த ஆண்டு உலக கோப்பை தொடருக்கு தேவையான சமநிலையில் இந்திய ஒருநாள் அணி இல்லை என அதிருப்தி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rahul dravid press meet about team india


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal