ட்ராவிட் - இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர்! வெளியாகுமா அறிவிப்பு?! இறக்கை கட்டி பறக்கும் செய்திகள்!  - Seithipunal
Seithipunal


ஐபிஎல் போட்டிகள் நிறைவுற்ற நிலையில், அடுத்ததாக இந்திய அணியானது இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியில் கலந்துகொள்ள இருக்கிறது. இந்த போட்டி தொடருடன் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருக்கும் ரவிசாஸ்திரி, அந்த பொறுப்பில் இருந்து விலகுகிறார். 

இதையடுத்து இந்தியாவின் புதிய பயிற்சி தலைமை பயிற்சியாளர் யார்? என்ற தேடல் ஆனது, நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், தேசிய கிரிக்கெட் அகடமியின் தலைவராக இருந்து வரும் ராகுல் டிராவிட், இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக வருவார் என பல செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. 

பல வெளிநாட்டு வீரர்களை பயிற்சியாளராக கேட்டாலும், இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, சரியான நபராக ராகுல் டிராவிட் தான் இருப்பார் என பலரும் விருப்பம் தெரிவித்தனர். அதனை தற்போதைய பிசிசிஐ தலைவர் மற்றும் ட்ராவிட்டின் சக ஆட்டக்காரரான சவுரவ் கங்குலி வழி மொழிந்துள்ளதாகவும், இது தொடர்பாக அவருடன் பேசியவுடன், அதற்கு டிராவிட் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. 

இந்திய அணிக்காக இளம் வீரர்களை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருந்த ராகுல் டிராவிட் தற்போது தேசிய அணிக்கு பயிற்சியாளராக ஒப்பந்தம் ஆவார் என தெரிகிறது. 20 ஓவர் போட்டி உலக கோப்பை தொடர் முடிந்தவுடன் நடைபெறவிருக்கும் நியூசிலாந்து தொடரில் இருந்து இரண்டு வருடங்களுக்கு அவருடைய ஒப்பந்தமானது இருக்கும் எனவும், 2023, 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டித் தொடர் வரை ஒப்பந்தமானது அமலில் இருக்கும் என தெரியவருகிறது. மேலும் ராகுல் டிராவிட்டுக்கு ஊதியமாக ரூபாய் 10 கோடி பேசப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது. 

தற்போது இந்திய அணியில் விளையாடி கொண்டிருக்கும் இளம் வீரர்கள் அனைவருக்கும் ராகுல் டிராவிட் மிகவும் பரிச்சயமானவர். மேலும்  டிராவிட்டால் பட்டை தீட்டப்பட்டவர்கள் என்பதால் இந்திய கிரிக்கெட் அணி அடுத்த நிலைக்கு உயரும் என அனைவரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். மேலும் தற்போதைய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதரன் இருவரும் தொடர்ந்து இருப்பார்கள் எனவும் பந்து வீச்சு பயிற்சியாளர் மட்டும் மாற்றப்படுவார் எனவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது. 

இந்திய ஏ அணி, U19 அணி போன்றவற்றிக்கு பயிற்சியாளராக ட்ராவிட் முத்திரை பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் தேசிய கிரிக்கெட் அகடமிக்கு தலைவராக ட்ராவிட் மீண்டும் நியமிக்கப்பட்ட நிலையில், அந்த பொறுப்பில் இருந்து விரைவில் விலகுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rahul Dravid accepted the Bcci request as India head coach


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->