அடுத்த ஐபிஎல்லுக்கு அணிமாறும் ரஹானே.! புத்துயிர் பெறும் முக்கிய அணி,?! - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டு 12வது ஐபிஎல் தொடர் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் 4வது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம்  வென்றது. அடுத்ததாக நடைபெறப்போகும் ஐபிஎல் தொடர்களில் புதிதாக இரண்டு அணிகள் பங்கேற்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வருகின்றது. 

டிரேட் எனப்படும் பரிமாற்றும் முறையின் மூலமாக ஐபிஎல் அணிகள் வீரர்களை பரிமாற்றம் செய்துகொள்ளும் முறை இருக்கின்றது. இந்த முறைப்படி  மயங்க் மார்கண்டேவை டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் கொடுத்துவிட்டு மும்பை அணியானது அதற்கு பதில் டெல்லி அணி வீரர் ரூதர்போர்டை தங்கள் அணிக்கு எடுத்துக்கொண்டது. 

rahane

இப்படிப்பட்ட நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான அஜின்கியா ரஹானேவை டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கொண்டு வர இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த ஒப்பந்தமானது பாசிட்டிவாக முடிந்தால் அடுத்த ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ரஹானே ஆடுவார். 

இதுகுறித்து வெளியான தகவலில், 'ரஹானேயை டெல்லி அணிக்கு இழுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த டீல் வொர்க்கவுட் ஆகுமா என தெரியவில்லை. இந்த விஷயம் நடைபெற கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல இருக்கிறது. மேலும், ரஹானே ராஜஸ்தான் அணிக்கு மிகப்பெரிய விளம்பரத்தூதராக இருக்கின்றார்.' என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

English Summary

rahane may join with this team in ipl


கருத்துக் கணிப்பு

வேலூர் மாவட்டத்தினை மூன்றாக பிரிப்பதால் மக்களின் வாழ்வாதாரம்?
கருத்துக் கணிப்பு

வேலூர் மாவட்டத்தினை மூன்றாக பிரிப்பதால் மக்களின் வாழ்வாதாரம்?
Seithipunal