கத்திக்குத்து தாக்குதல்:ஓட்டல் அறையில் வெடித்த காதல் சண்டை…சென்னை நபர் கைது...! நடந்தது என்ன...?
Stabbing attack romantic dispute erupts hotel room Chennai man arrested What happened
சென்னையைச் சேர்ந்த பிரதீப் குமார் செல்வராஜ் (40) என்பவருக்கும், மேற்கு வங்காளம் கொல்கத்தாவைச் சேர்ந்த 38 வயதான பெண்ணுக்கும் இடையே நீண்ட காலமாக காதல் உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இருவரும் நேற்று கொல்கத்தா – பிபி கங்குலி தெருவில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியுள்ளனர். அப்போது, ஓட்டல் அறைக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் திடீரென தீவிரமடைந்து, அது கொடூரமான தாக்குதலாக மாறியது.

ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த பிரதீப், தனது காதலியை கத்தியால் குத்தி தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த கத்திக்குத்து தாக்குதலில் அந்த பெண் படுகாயமடைந்து அலறி துடித்தார்.
அவரின் கத்தல் சத்தம் கேட்டு ஓடிவந்த ஓட்டல் ஊழியர்கள் உடனடியாக பெண்ணை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனுடன், சம்பவம் குறித்து உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், காதலியை கத்தியால் குத்திய பிரதீப் குமார் செல்வராஜை கைது செய்தனர்.
தற்போது, இந்த தாக்குதலுக்கு காரணமான விவகாரங்கள் என்ன என்பதைக் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம், கொல்கத்தா பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Stabbing attack romantic dispute erupts hotel room Chennai man arrested What happened