பி.டி.உஷா சாதனையை முறியடித்து வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா - அன்புமணி இராமதாஸ் வாழ்த்து!
pmk anbumani ramadoss wish vidhya ramraj
பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: பி.டி.உஷா சாதனையை முறியடித்து வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யாவுக்கு வாழ்த்துகள்!
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் 400 மீட்டர் தடை தாண்டி ஓடும் போட்டிகளில் தமிழக் வீராங்கனை வித்யா ராம்ராஜ் 54.75 வினாடிகளில் இலக்கை எட்டி வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
1984-ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் அப்போதைய இந்திய வீராங்கனையும், இப்போதைய இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவருமான பி.டி.உஷா 55.42 வினாடிகளில் 400 மீட்டர் தொலைவை தடை தாண்டி கடந்தது தான் இந்திய தேசிய சாதனையாக இருந்தது. கடந்த 42 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த பி.டி.உஷாவின் சாதனையை வித்யா முறியடித்திருப்பதற்கு எனது பாராட்டுகள்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வித்யா பங்கேற்கவுள்ள பிற போட்டிகளிலும் பதக்கம் வெல்ல வாழ்த்துகள்.!
English Summary
pmk anbumani ramadoss wish vidhya ramraj