காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் வாழ்த்து..! - Seithipunal
Seithipunal


22 வது காமன்வெல்த் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 72 நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.நேற்று நடைபெற்ற் ஆண்களுக்கான (+109 கிலோ) பளுதூக்குதலில் இறுதி போட்டியில் இந்திய வீரர் குர்தீப் சிங் வெண்கலபதக்கம் வென்ரார். அதன்பின்,நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் இறுதி போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் வெண்கல பதக்கம் வென்றார்.

நேற்று ஒரே நாளில் இந்தியா 1 வெள்ளி, 4 வெண்கலம் என ஐந்து பதக்கங்களை வென்றது. இந்நிலையில், காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்களை பெற்றவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தேஜஸ்வின் சங்கர் வரலாறு படைத்தார். வெண்கலபதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துக்கள் எனவும் அவரது எதிர்கால முயற்சிக்கு வாழ்த்துகள் எனவும் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில்,கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் சிறந்த பலன்களுக்கு வழிவகுக்கும் என காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்றதன் மூலம் குர்தீப் சிங் நிருப்பித்துள்ளார் எனவும்குடிமக்கள் மத்தியில் மகிழ்ச்சியின் உணர்வை அதிகப்படுத்தியுள்ளார், அவருக்கு எனது வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi congratulates the Winners of commonwealth


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal