நேற்றைய போட்டி மூலம் ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்த பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள்.!!
PBKS vs RCB worst history in IPL
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மோசமான வரலாற்று சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் படைத்துள்ளது.
ஐபிஎல் 15 சீசனில் 3 ஆவது லீக் போட்டியில் இந்த மோசமான சாதனை அரங்கேறி உள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்ச் பெங்களூரு அணி அதிரடியாக விளையாடி 205 ரன்கள் எடுத்தது. பெங்களூர் அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் அற்புதமாக விளையாடி 88 ரன்களை எடுத்திருந்தார். அவரை தொடர்ந்து விராட் கோலி, தினேஷ் கார்த்திக் ஆகியோர் சிறப்பாக ஆடி அணிக்கு அதிக அளவில் ரன்களை குவித்தனர். 20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 2 விக்கெட் இழப்புக்கு 205 ரன்களை எடுத்திருந்தது.

இதையடுத்து, 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி, ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய மயங்க் அகர்வால், ஷிகர் தவான் சிறப்பாக விளையாடினர். அடுத்து இறங்கிய வீரர்களும் சிறப்பாக விளையாடினர். இறுதியில் ஷாருக்கான், ஒடியன் ஸ்மித் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்தனர்.
இந்த போட்டியில் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினாலும், பந்துவீச்சாளர்கள் சரியாக பந்து வீசவில்லை. பந்துவீச்சாளர் மொத்தமாக 45 ரன்களை எக்ஸ்ட்ராவாக கொடுத்தனர். அதில் பஞ்சாப் அணி 23 ரன்களும், பெங்களூரு அணி 22 ரன்களை கொடுத்தது. மொத்தமாக 33 Wide பால் போடப்பட்டது.

ஐபிஎல் வரலாற்றில் ஒரே போட்டியில் அதிக அளவில் எக்ஸ்ட்ராவில் கொடுத்த போட்டியாக அமைந்துள்ளது இந்த போட்டி இதற்கு முன்னதாக கடந்த 2008ல் ஒரே போட்டியில் 38 ரன்கள் எக்ஸ்ட்ராவாக கொடுக்கப்பட்டது. அந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
English Summary
PBKS vs RCB worst history in IPL