பஞ்சாப் அணியை துவம்சம் செய்து 17 வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி.!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 64-வது லீக் போட்டி நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் சர்பராஸ் கானுடன், மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருந்தபோது சர்பராஸ் கான் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து லலித் யாதவ் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். 

மிட்செல் மார்ஷ் பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்து 63 ரன்களில் ஆட்டமிழந்தார். டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி சார்பில் லிவிங்ஸ்டோன், அர்ஷ்தீப் சிங் தலா 3 விக்கெட்டுகளையும், ரபாடா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினார். ஜானி பேர்ஸ்டோ ஆரம்பம் சிறப்பாக தொடங்கினாலும், 28 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். பானுகா ராஜபக்சே 4 ரன்னிலும், லிவிங்ஸ்டோன் 3 ரன்களிலும் வெளியேறினர். மயங்க் அகர்வால் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 

பொறுப்புடன் விளையாடிய ஜிதேஷ் சர்மா  44 ரன்கள் எடுத்தார். ராகுல் சாஹர் 25 ரன்கள் எடுத்தார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது. இதனால் 17 வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. டெல்லி அணி சார்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்களையும், குல்திப் யாதவ், அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PBKS vs DC Match DC Win


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->